எரிபொருள் கப்பல்கள் தாமதமாவதன் பின்னணியில் பாரிய சதி அம்பலம்

உள்நோக்கத்துடன் நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் குற்றம் சுமத்தியுள்ளார்.

எரிபொருள் கப்பல் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை அதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை பொதுமக்களிடம் விதைக்கும் நோக்கில் இந்த சதி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.