யாழில் முகமூடி கொள்ளையர்கள் - 20 பவுண் நகை மற்றும் 5 இலட்சம் ரூபாய் கொள்ளை


முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் 20 பவுண் நகைகள் மற்றும் 5 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து கொண்டு சென்றுள்ளார்.

பருத்தித்துறை திக்கம் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (31) செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் வசிக்கும் இளம் தம்பதியினர் தமது வீடு காட்டும் பணிக்காக 5 இலட்சம் பணமும் 20 பவுண் தங்க நகைகளையும் தமது வீட்டினுள் வைத்துள்ளனர்.

முகமூடி கொள்ளையர்கள்

இந்நிலையில், வீட்டின் கதவையுடைத்து உட்புகுந்த முகமூடியணிந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் வீட்டாரை தாக்கி விட்டு 5 இலட்சம் பணத்தையும் 20 பவுண் தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.