சர்ச்சையில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்: 6 வருடங்களுக்கு விளையாட தடை

மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சூப்பர் வீரரான மார்லன் சாமுவேல்ஸ் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியமையே இதற்குக் காரணமாக கருதப்படுகிறது.

இதனால் மார்லன் சாமுவேல்ஸ் அனைத்து கிரிக்கெட்டிலும் 6 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், சுயாதீன விசாரணை சபையினால் குறித்த வீரருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.