மேல் மாகாணத்தில் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்குதல் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, செல்லுபடியாகும் பயணச்சீட்டின்றி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்துடன், பயணச்சீட்டை வழங்குவதற்குத் தவறும் நடத்துனர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேல் மாகாணத்திற்குள் சேவைகளை முன்னெடுக்கும் பேருந்துகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் இன்று முதல், தங்களது பயணச்சீட்டை வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, பயணி ஒருவர் பயணச்சீட்டைப் பெற்றுக்கொள்ளாத நிலையில், அவருக்கு எதிராக 100 ரூபாய் அபராதம் மற்றும் கட்டணத்தை விட இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.