யாழில் கணவன் மனைவியை வெட்டியவர் பதுங்கியிருந்த நிலையில் கைது


யாழ்ப்பாணம் இருபாலையில் கணவன் மனைவியை வாளால் வெட்டி காயப்படுத்திய பின்னர் தலைமறைவாகி இருந்தவர் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இருபாலை மடத்தடி பகுதியில் கடந்த வாரம் வீட்டில் இருந்த கணவன் மனைவியை வெட்டி காயப்படுத்தி கடந்த பத்து நாட்களாக தலைமறைவாக இருந்தவரே இன்றைய தினம் கைது செய்யப்பட்டவராவார்.

வலைப்பாடு பகுதியில் தலைமறைவாகியிருந்த அவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டதோடு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள் ஒன்றும் சந்தேக நபரின் வீட்டின் கோழி கூட்டுக்குள் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர்