ஒரேநாளில் 15 கின்னஸ் உலக சாதனைகளை படைத்த நபர் - வைரலாகும் காணொளி


உலகில் தினந்தோறும் மனிதர்களால் ஏதாவதொரு சாதனை நிகழ்வு நடத்தப்பட்ட வண்ணமே உள்ளது.

அந்தவகையில் அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் லண்டனில் 15 கின்னஸ் உலக சாதனைகளை படைத்து மிரட்டியுள்ளார்.

அமெரிக்காவின் Idaho நகரைச் சேர்ந்த டேவிட் ரஷ்என்பவர் பல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.

அண்மையில் லண்டன் நகருக்கு சென்ற ரஷ், கின்னஸ் உலக சாதனைகளின் தலைமையகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு பல போட்டிகளில் கலந்துகொண்ட அவர், ஒரே நாளில் 15 கின்னஸ் உலக சாதனைகளை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

அவற்றில் Juggling Tricks, Juggling Balls, அமர்ந்தபடி பலூன்களை உடைத்தல், 30 வினாடிகளில் அதிக டி-ஷர்ட்கள் அணிதல் போன்ற சாதனைகள் அடங்கும்.

மேலும் அதிக அளவு தண்ணீரை 30 வினாடிகளில் கைகளால் தள்ளிவிடுதல், ஒரு லிட்டர் எலுமிச்சை சாற்றை ஸ்ட்ரா மூலம் மிக வேகமாக குடிப்பது உள்ளிட்ட சாதனைகளையும் ரஷ் ஒரே நாளில் முறியடித்துள்ளார்.

இதேவேளை டேவிட் ரஷ் (David Rush) தனது வாழ்நாளில் 250 உலக சாதனைகளை முறியடித்துள்ளார் என்பதோடு அவர் "Serial Record Breaker" எனும் பெயரைப் பெற்றுள்ள நிலையில் அவர் குறித்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.