அடுத்த தேர்தலில் தனித்து களமிறங்குகின்றது மைத்திரி தலமையிலான சு.க!

எதிர்வரும் தேர்தலில் தனிக் கூட்டணியாக போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச இதனை தெரிவித்தார்.5,000 மேலதிக கொடுப்பனவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளபோதும் மக்கள் தொகையில் 7 விகிதமானோர் மட்டுமே அரசுத்துறை ஊழியர்கள் என சுட்டிக்காட்டினார்.மேலும் அரசாங்கம் தொடர்ந்து அச்சிட்டே 5,000 ரூபாயை வழங்குகின்றது என்றும் ரோஹன லக்ஸ்மன் பியதாச குற்றம் சாட்டினார்.அதிகரித்து வரும் பொருட்களின் விலையால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் 650,000 பேர் இரவு உணவை உட்கொள்வதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் சுதந்திரக் கட்சியிடம் தீர்வை எதிர்பார்த்து வருவதாகவும் அதற்காக கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.