ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யார் என தனக்கு தெரியும் என மைத்திரி பரபரப்பு தகவல்


உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தமக்கு தெரியும் எனவும் நீதிமன்றம் கோரினால் அதனை வெளிப்படுத்த தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
 
இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் எங்கு நடந்தது என்பதையும் நாம் அறிவோம்.

அந்த வழக்குகள் அனைத்தையும் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு விசாரிக்கிறது.

ஈஸ்டர் தாக்குதலை உண்மையில் யார் செய்தார்கள் என்று இதுவரை யாரும் கூறவில்லை,

ஆனால் அதை யார் செய்தார்கள் என்பது எனக்குத் தெரியும்.

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதைச் சொல்லத் தயாராக இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.

இதேநேரம் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய நூல் இன்று வெளியிடப்படுகிறது.

'ஈஸ்டர் படுகொலை" என்ற பெயரில் இந்த நூல் வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் இந்த நிகழ்வுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தரப்பினருக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான பல தகவல்கள் இந்த நூலின் ஊடாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.