தேர்தலை எதிர்கொள்ள மைத்திரி தரப்பு திரைமறைவில் திட்டம்!

தேர்தலுக்கான நகர்வுகளை முன்னெடுப்பதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சி விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக அந்தக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேசிய மட்டத்திலான தேர்தல்களில் சுதந்திரக் கட்சி எவ்வாறு செயற்பட வேண்டும், அதற்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பன உள்ளிட்ட விடயங்களை இந்தக்குழு தீர்மானிக்கும் எனவும் அவர் கூறினார்.

அடுத்த வருடம் (2024) அதிபர் தேர்தல் நடத்தப்படும் என அதிபர் அறிவித்துள்ளார், ஆனால் சிலவேளைகளிலே அதற்கு முன்னதாக பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு தயாராக வேண்டும், அதற்காகவே இந்தக்குழு நியமிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.