முக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடையாளம் : உதவிகோரும் பொலிஸார்


மினுவாங்கொடை – கமன்கெதர பகுதியில் கடந்த ஆறாம் திகதி இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், குறித்த நபர் அவரது வசிப்பிடத்திலிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளார்

இந்நிலையில், சந்தேக நபரின் முழுமையான விபரங்களை வெளியிட்டு குறித்த நபரைக் கைதுசெய்ய பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பெயர் – ஜயகொடகே சஞ்சீவ தோன சஞ்ஜீவ லக்மால்

வயது – 39

தேசிய அடையாள அட்டை இலக்கம் – 833214292V

முகவரி – இலக்கம் 10 மகிந்தாராம வீதி ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை

இந்நிலையில், குறித்த சந்தேக நபரை எவரேனும் எந்தப் பகுதிகளிலும் அடையாளம் காண்டால், சிரேஷ்ட்ட பொலிஸ் அத்தியட்சகர் – கம்பஹா – 071 85 91 608, உதவி பொலிஸ் அதிகாரி – கம்பஹா – 071 85 91 610, மினுவாங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – 071 85 91 612  ஆகிய  தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.