நாளை ஆளும்கட்சி உறுப்பினர்களை சந்திக்கின்றார் மஹிந்த!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற  முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அமைச்சரவையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரியுள்ளனர்.மாற்று அரசாங்கமொன்றை உருவாக்க முடியும் என்ற உத்தரவாதத்திற்கு உட்பட்டு பதவி விலகுவதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்திருந்தார் என்றும் தகவல் வெளியாகியிருந்தன.இந்நிலையில் பிரதமர் மஹிந்த நாளை தனது பதவி விலகல் குறித்து அறிவிப்பார் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.