மகிந்தவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர்.

பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகுவதற்கு முன்னர், அவருக்கு ஆதரவான குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் வன்முறை வெடித்ததுடன் பத்து பேர் வரையில் உயிரிழந்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.