மகிந்த குடும்பம் திருகோணமலையில் பதுங்கியுள்ளதாக தகவல்

திருகோணமலை கடற்படை முகாமிற்கு இரண்டு உலங்கு வானூர்திகள் இன்று காலை வந்து சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உலங்கு வானூர்தியில் இருந்து ஏராளமான பைகள் இறக்கப்பட்டு சிறிது நேரத்தின் பின்னர் அவை அங்கிருந்து சென்றுள்ளன.

குறித்த முகாமை சூழவுள்ள  பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி அல்லது பிரதமர் வரும்போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பைப் போன்றே பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இரத்மலானை விமான நிலையத்தில் நேற்றிரவு முதல் பல தடவைகள் உலங்குவானூர்தி பயணித்ததாகவும், அங்கிருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் மக்கள் வெளியிட்ட பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் மகிந்த குடும்பம் வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் செல்லும் முன்னாயத்தங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்காக திருகோணமலை இராணுவ முகாமிற்கு விரைவில் வரக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கொழும்பு பொலிஸ் மைதானத்தில் இருந்து உலங்கு வானூர்த்தி ஒன்று சிலரை ஏற்றிக்கொண்டு அவசரசமாக செல்லும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. 

இது நாமல் ராஜபக்சவின் உறவினர்களாக இருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.