ரணில் விக்ரமசிங்கவிற்கு மஹிந்த மற்றும் நாமல் வாழ்த்து!

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், “இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமருக்கு வாழ்த்துக்கள் இந்த இக்கட்டான காலகட்டங்களில் நீங்கள் பயணிக்க நான் உங்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.இதேநேரம், நாமல் ராஜபக்ஷ வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் “நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பணி சிறப்பாக அமைய புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்துக்கள். மும்மூர்த்திகள் உங்களை வழிநடத்தி பாதுகாக்கட்டும்” என பதிவிட்டுள்ளார்.