மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவின் தரப்பினரை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினரை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அமைதிப் போராட்டத்தில் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பாக வாக்குமூலம் வழங்க அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் கடந்த 9ம் திகதி ‘ மைனா கோ கம ‘ மற்றும் கோட்டா கோ கம’ ஆகிய பகுதிகளில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.