ஆசிய கிண்ண தொடர் :இலங்கை அணிக்கு பின்னடைவு

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்சனா நாளை நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டதே அதற்கு காரணம்.

அவருக்கு பதிலாக சஹான் ஆராச்சிகே அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நாளை (17)நடைபெறவுள்ளது.