மாவீரர் வாரம் ஆரம்பம் -யாழில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு


மாவீரர் நாளுக்கு தமிழர் தாயகம் உணர்வெழுச்சியுடன் தயாராகும் நிலையில், மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாளான இன்று பொதுமக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.

நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதேவேளை, மாவீரர் வாரம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள நிலையில், கோப்பாய் துயிலுமில்ல பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வீதிச்சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மாவீரர் வார நினைவுக்கூரல்கள், மற்றும் ஏற்பாட்டு நிகழ்ச்சிகள் சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தினரின் தடைகளை தாண்டி வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.