இலங்கை உட்பட பல நாடுகளில் அரசாங்கங்களை மாற்ற சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் (USAID) பணம் செலவழித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
தனது எக்ஸ் தள பதிவில் இதனை கூறியுள்ளார்.
அமெரிக்க டொலர்கள்
அமெரிக்க முதலீட்டாளர் ஜோர்ஜ் சொரோஸ்USAID சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தில் இருந்து 260 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்று, அதனை இலங்கை, பங்களாதேஷ், உக்ரைன், சிரியா, ஈரான், பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சர்ச்சைகளை பரப்பவும், அரசாங்கங்களை மாற்றவும், தனிப்பட்ட ஆதாயத்தைப் பெறவும் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.