நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்புச் சபைகள் மறுசீரமைக்கப்பட வேண்டுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மூடாவிட்டாலோ அல்லது வேறு நடவடிக்கைகள் எடுக்காது விட்டாலோ நாட்டை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.
அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            