லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு..! வெளியான அறிவிப்பு

நாட்டில் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மிதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சமையல் லிற்றோ சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அந்த வகையில், 12.5 கிலோ எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 4,250 ரூபாயாக உள்ளது.

மேலும், 5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 1,707 ரூபாயாக உள்ளது.

அத்துடன், 2.3 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 795 ரூபாயாக உள்ளது.

இன்று முதல் (01) பெறுமதி சேர் வரி நடைமுறைக்கு வருவதனால் அதனையொட்டி பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 5 மணியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.