மின் துண்டிப்பு நேரம் அதிகரிக்கும் வாய்ப்பு

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி  இயந்திரம்  ஒன்று செயலிழந்துள்ளந்தமையினால் மின்தடை அமுலாகும் காலப்பகுதி நீடிக்கப்பட வேண்டுமென இலங்கை மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது 3 மணித்தியாலங்களும்  20 நிமிடங்களுக்கு மின்தடை அமுல்படுத்தப்படுகின்ற நிலையில் , மின்தடை அமுலாகும் காலப்பகுதியினை 5 மணித்தியாலங்களுக்கு நீடிக்க வேண்டியுள்ளதாகவும் மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம்  மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே நாடளாவிய ரீதியில் இன்று மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.