களமுனையிலிருந்து தலைவர் பிரபாகரன் வெளியேறவேயில்லை..!


போரின் இறுதி கட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் களமுனையிலிருந்து வெளியேறவேயில்லை என போராளி நலன்புரிசங்கத்தின் செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தலைவர் பிரபாகரன் இருப்பு தொடர்பில் சிலர் வெளியிட்ட தகவல்கள் மற்றும் காணொளிகள் அனைத்தும் அப்பட்டமான பொய்கள்.

அதேவேளை, போரின் இறுதிக்கட்டத்தில் போது தலைவர் பிரபாகரன் இந்த போராட்டக்களத்தை விட்டு வெளியேறவில்லை என்பதை நாங்கள் ஆணித்தரமாக நம்புகின்றோம்.

தலைவரின் மகள் துவாரகா தொடர்பில் பரப்பட்ட தகவல்கள் அனைத்தும் பொய்யானவையே, குறிப்பாக துவாரகா என்று யுத்தகாலத்தில் அரச தரப்பல் வெளியிடப்பட்ட புகைப்படம் கூட துவாரகாவின் உடையது அல்ல என தெரிவித்துள்ளார்.