கொள்ளுப்பிட்டி விபத்தின் பின்னர் பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவு

நாட்டில் நிலவும் மோசமான காலநிலையால் முறிந்துவிழும் அபாயத்தில் உள்ள சாலையோர பெரிய மரங்கள் குறித்து உடனடி ஆய்வு மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் மக்களுக்கு ஆபத்தான வகையில் உள்ள மரங்களை அகற்றுமாறும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், சுற்றுச்சூழல் அதிகாரசபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இன்று(6) காலை கொள்ளுப்பிட்டியில் நடந்த கோர விபத்தின் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.