வண்டில் சின்னத்தின் பின்னனியில் கோடீஷ்வரன் - கண்டுகொள்ளாமல் தமிழரசின் உயர்மட்டம்



"உள்ளூராட்சி சபை தேர்தல்" முன்னெப்போதுமே இல்லாதவாறு பல பல கட்சிகளாலும், சமூக செயற்பாட்டாளர் என சொல்லிக்கொண்டு களமிறக்கும் சுயேட்சை குழுக்களாலும் பல மடங்கு சூடு பிடித்திருக்கிறது.

அப்படியிருக்க, அம்பாறை மாவட்டம் திருக்கோயில் பிரதேச சபை தமிழரசுகட்சி வேட்பாளர் பட்டியலில் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசனின் ஆதரவாளர்கள்கள் உள்வாங்கப்பட்டதை பொறுத்துக்கொள்ளாத முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஷ்வரன் தமது ஆதரவாளர்களை கொண்டு ஒரு சுயேட்சைக்குளுவை களமிறக்கியுள்ளார்.

வண்டில் சின்னத்தில் போட்டியிடும் அந்த சுயேட்சைகுழு தமிழரசுகட்சிக்கு எதிராக சரமாரியா பிரச்சாரம் செய்து வருகிறது.

அத்தோடு நிறுத்திவிடாது அந்த சுயேட்சை குழுவின் துண்டுப்பிரசுரத்தில் தந்தை செல்வாவின் படத்தை இணைத்து விளம்பரம் செய்து வருகிறது.

இந்த விடயம் தொடர்பில் திருக்கோயில் தமிழரசுகட்சி ஆதரவாளர்கள் தமிழரசுகட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவிடம், கோடீஷ்வரன் தமிழரசுகட்சிக்கு எதிராக செயல்படுவதாகவும் தந்தை செல்வாவின் படத்தை பாவித்து பிரச்சாரம் செய்வதாகவும் ஆட்சேபித்துள்ளனர்.

ஆனால் தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, தந்தை செல்வாவின் படத்தை சுயேட்சைக்குழு பாவிப்பதை தம்மால் தடுக்கமுடியாது என கூறியிருக்கின்றார்.

அது மட்டுமல்லாது கிளிநொச்சியில் சுமந்திரனும் சுயேட்சைக்குழுவை இறக்கியுள்ளதாக சமாளித்திருக்கிறார்......