கம்பத்தில் சிக்கிய தேசியக் கொடி.. பறந்து வந்து மீட்ட பறவை! - கேரளாவில் ஆச்சர்ய சம்பவம்!

Video link - https://youtube.com/shorts/9ppVIFuAFts?si=8W4kxuy_9yrJlASH


கேரளாவில் சுதந்திர தினத்தன்று கம்பத்தில் பறக்காமல் சிக்கிய தேசியக் கொடியை பறவை ஒன்று வந்து விடுவித்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியா முழுவதும் கடந்த 15ஆம் திகதி நாட்டின் 78வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
 
அவ்வாறாக கேரளாவின் ஒரு பகுதியில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.


 கேரளாவின் ஒரு கிராமத்தை சேர்ந்த பாடசாலையில் சுதந்திர தின விழாவிற்கு கொடி ஏற்றப்பட்டுள்ளது. கொடி சுருக்கி கட்டப்பட்டு மேலே சென்றதும் விரிந்து பறக்கத் தொடங்கும். ஆனால் அங்கு ஏற்றப்பட்ட கொடி உச்சிக்கு சென்றும் விரியாமல் சிக்கிக் கொண்டிருந்தது.

அப்போது திடீரென ஒரு மரத்திலிருந்து பறந்து வந்த சிறு பறவை ஒன்று சிக்கிக் கொண்டிருந்த தேசியக்கொடியை தன் அலகால் கொத்தி முடிச்சுகளை அவிழ்த்து பறக்க செய்தது. பின்னர் மீண்டும் மரங்களுக்கிடையே பறந்து சென்று மறைந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.