கெஹல்பத்தர பத்மே தொடர்பில் நடிகை வெளியிட்ட பரபரப்புத் தகவல்கள்

பாதாள உலகக் குழுவின் தலைவர் கெஹல்பத்தர பத்மேவின் கையடக்க தொலைபேசியில் கண்டுபிடிக்கப்பட்ட புகைப்படங்களுக்கமைய, மற்றுமொரு நடிகை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று அழைக்கப்பட்ட நடிகை ஸ்ரீமாலி பொன்சேகாவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக, இது தொடர்பாக பியூமி ஹன்சமாலியும் விசாரிக்கப்பட்டார். மேலும் மூன்று நடிகைகள் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளனர்.

நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார். நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

உண்மையில், இன்று (நேற்று) 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு புத்தாண்டு நிகழ்வு மற்றும் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது. இலங்கையில் நாங்கள் பணத்தை மோசடி செய்ததாக இங்கு ஒரு பெரிய கதை உள்ளது.

அதனை தெளிவுபடுத்த வேண்டிய தேவை எனக்குள்ளது. ஏனென்றால் நாங்கள் சட்டத்திற்கு பயந்து வாழும் மிகவும் சட்டபூர்வமானவர்கள். நாட்டில் இது போன்ற விடயங்கள் நடக்க ஒருபோதும் விரும்புவதில்லை.

விசாரணைக்கு நான் எனது முழு ஆதரவையும் வழங்கினேன். நாட்டில் உள்ள பிரச்சினைகளையும் இந்த சட்டவிரோத விடயங்களையும் அகற்ற வேண்டும். சட்டவிரோத செயற்பாடுகளால் என வர்த்தக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

எனது அனைத்து வணிக நடவடிக்கைகளையும் நான் 2017 ஆம் ஆண்டில் ஆரம்பித்தேன். அப்போதிலிருந்து செய்த விடயங்களை நாங்கள் எவ்வாறு கையாண்டோம் என்பதனை விசாரணையின் போது தெளிவுபடுத்தியுள்ளேன்.

புத்தாண்டு கொண்டாட்டம்

பாதாள உலகத் தலைவருடன் நான் இருப்பது போன்ற ஒரு படம் தொடர்பில் என்னை விசாரணைக்கு அழைத்தார்கள். ஆனால் அந்தப் படம் டுபாயில் ஒரு புத்தாண்டு நிகழ்விற்காக சென்ற போது எடுக்கப்பட்டது. புத்தாண்டு நிகழ்வில் நிறைய பேர் கலந்து கொண்டனர்.

இதில் நடிகர்கள் மற்றும் நடிகைகளும் உள்ளனர். தற்போது பேசப்படும் அனைவரும் இதில் ஈடுபட்டனர். இந்த புத்தாண்டு நிகழ்விற்காக என் சொந்த செலவில் சென்றமைக்கான ஆதாரங்களை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளேளன்.

தவறான தகவலின் அடிப்படையில் எமது வர்த்தக நடவடிக்கை சீர்குலைக்க சதி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் அவர்கள் நினைப்பது போன்று எம்மை வீழ்த்த முடியாது. நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய எமது வர்த்தக நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்கிறோம். டுபாயில் நடைபெற்ற புத்தாண்ட கொண்டாட்ட நிகழ்வில் அதிகளவானர்கள் கலந்து கொண்டார்கள்.

நானும் முதன்முறையான நிகழ்வில் பங்கேற்றேன். எனக்கு டுபாயில் குடியுரிமை விசா உள்ளது. 2001ஆம் அண்டு முதல் டுபாய்க்குச் சென்று வருகிறேன். அங்கு எனது வர்த்தக நடவடிக்கையும் உள்ளன.

கெஹல்பத்தர பத்மே யார் என்பது எனக்கு தெரியாது. கொண்டாட்ட நிகழ்வுக்கு அழைத்தமையினால் எல்லோர் போன்று நானும் சென்று வந்தேன். இதன்போது புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

இலங்கையிலும் இவ்வாறான கொண்டாட்ட நிகழ்வுகளின் போது எல்லோருடன் இணைந்து புகைப்படம் எடுப்பது வழமையான ஒன்று. கெஹல்பத்தர ஆபத்தான நபர் என்பது எனக்கு தெரியாது.

இவ்வாறான நிலையில், பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் கலைஞர்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் போது மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகவும் ஸ்ரீமாலி பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.