ஐசிசி டெஸ்ட் பிளேயர் ஆஃப் த இயர் விருதுக்கு கருணாரத்ன பரிந்துரைக்கப்பட்டார்

2021ம் ஆண்டு ஐசிசி யின் சிறந்த டெஸ்ட் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியலில் இலங்கை அணியின் திமுத் கருணாரத்னவும் உள்ளடங்கப்பட்டுள்ளார்.

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன இவ்வாண்டு மொத்தமாக 7 போட்டிகளில் விளையாடி 69.38 சராசரியில் 902 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதில் 4 சதங்களும் அடங்கும்.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் ஒரு அற்புதமான சதம், பல்லேகலவில் நடந்த இரண்டு போட்டிகளில் பங்களாதேஷுக்கு எதிராக ஒரு இரட்டை சதம் உட்பட இரண்டு சதங்கள் மற்றும் மெற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக காலியில் ஒரு அற்புதமான சதம் கருணாரத்னவின் இவ்வாண்டின் சிறப்பம்சங்களாக உள்ளன.

திமுத் கருணாரத்ன தவிர இவ்விருத்துக்கான பரிந்துரையில் இங்கிலாந்தின் ஜோ ரூட், இந்தியாவின் ரவிச்சந்திரன், அஸ்வின் மற்றும் கைல் ஜெமிசன் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.