நாட்டின் சுபீட்சத்தை இலக்காக கொண்டு செயற்படுவதற்கு பதிலாக பசிலின் சிந்தனையை செயற்படுத்தியமையினால் கோட்டாபய ராஜபக்ச, தனது குடும்பத்துடன் பகைமையை வளர்த்துக்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விசனம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் மொட்டு கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு 3 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவது சவாலான விடயம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சமூகத்தில் பெரும் மரியாதை இருப்பதாகவும், அதனால் அந்த மரியாதையை காப்பாற்றும் வகையில் அவர் அரசியல் மேடைக்கு வரக்கூடாது எனவும் கம்மன்பில எடுத்துரைத்துள்ளார்.
மேலும், இந்த நாட்டின் அரசியலில் இருந்து பெருமிதத்துடன் மகிந்த வெளியேற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் எனவும் கூறியுள்ளார்.

இதேநேரம் தற்போதைய ஜனாதிபதி அரச அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களே, ஜனாதிபதியின் ஆலோசகர்களாகவும் ஆளுநர்களாகவும் உள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ”ரணில் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு உல்லாசங்களை அனுபவித்து வருகின்றார்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊழலில் ஈடுபட்டவர்களிடமே நாட்டை மீண்டும் கையளிக்காமல் சரியான தீர்க்கமான முடிவை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என ஜக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ். எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்
முன்னாள் ஜனாதிபதியுடன் கூட்டு சேர்வதற்கோ அல்லது அவ்வாறான ஆதரவைப் பெறுவதற்கோ தேவை இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தாம் தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சில ஊடகங்களில் தாம் தொடர்பில் வெளியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் மைத்திரிபால சிறிசேன தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.