உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பதற்காக பலரும் வெவ்வேறுபட்ட கடின முயற்சிகளை மேற்கொண்ட வண்ணமே உள்ளனர்.
நேபாளத்தின் புகழ்பெற்ற மலையேற்ற வீரரான கமி ரீட்டா என்பவரே உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 29ஆவது முறையாக ஏறி அதிகமுறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறியவா் என்ற தனது முந்தைய சாதனையைத் தானே முறியடித்துள்ளாா்.
54 வயதான கமி ரீட்டா 8,848 மீற்றர் உயரத்தை உடைய எவரெஸ்ட் சிகரத்தை கடந்த 1994-ஆம் ஆண்டு தனது 24ஆவது வயதில் அடைந்த நிலையில் தற்போது, 29 ஆவது முறையாக ஏறி சாதனை புரிந்துள்ளார்.
இந்நிலையில் கமி ரீட்டாவின் சாதனை குறித்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.