யோஷித ராஜபக்ஷ தொடர்பில் பல முக்கிய தகவல்களை வெளியிட்ட நீதி அமைச்சர்


 
யோஷித்த ராஜபக்ஷ்வுக்கு பிணை வழங்கியதன் மூலம் அவர் வழக்கில் இருந்து விடுதலையாகியதாக கருத முடியாது. நாங்கள் என்ன செய்வது என இன்னும் ஓன்று அல்லது இரண்டு மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

யோஷித்த ராஜபக்ஷ்வுக்கு நீதிமன்ற பிணை வழங்கப்பட்டிருப்பது தொடர்பில் சமூகவலைத்தலங்களில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்த அவர்
 

யோசித்த ராஜபக்ஷ்வுக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கியமை தொடர்பில் சமூகவலைத்தலங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

யாரேனும் ஒருவருக்கு பிணை கிடைப்பது என்பது அவர் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலையாகுவதல்ல.
பிணை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமையவே பிணை வங்கப்படுகிறது. 

பணச் சலவை தொடர்பில் யோஷித்த ரஜபக்ஷ்வுக்கு எதிரான இந்த சம்பவம் 8 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவமாகும்.
ஆனால் இதுவரை இந்த வழக்கில் அவரை சந்தேக நபராக பெயரிட்டிருக்கவி்லலை. அதற்கான காரணம் என்ன என்பதை எங்களுக்கு புரிந்துகொள்ள முடியும்.

யாரேனும் ஒரு நபருக்கு மேல் நீதிமன்றத்தினால் குற்றப்பத்திரம் சமர்ப்பிக்க முன்னர். அவர் சந்தேக நபராக அவரிடம் வாக்குமூலம் பெறுவது அத்தியாவசியமான விடயமாகும்.
அதனால் அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து பார்த்து யோசித்த ராஜபக்ஷ்விடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபரினால் குற்றப்புவனாய்வு பிரிவுக்கு ஆலாேசனை வழங்கப்பட்டிருக்கிறது. இதுதான் வழமையான நடவடிக்கை.

தற்போது அவருக்கு பிணை வங்கப்பட்டிருக்கிதே தவிர அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இ
தனை அடிப்படையாகக்கொண்டே அவர் விடுதலையாகி சென்றுள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று அவருக்கு கை விலங்கு அணிவிக்கவில்லை என சிலர் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
 
இந்த சம்பவத்தின் மூலம் சில ஊடங்களால் சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ{க்கு பொறுப்பான அமைச்சர் தொடர்பில் சந்தேகித்து செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆனால் இந்த சந்தேகங்கள் அனைத்தும் இன்னும்  ஓரிரு மாதங்களில் இல்லாமல் போகும். யோஷித்த ராக்ஷ்வுக்கு எதிரான பணச்சலவை வழக்கு தொடுக்கப்படும் என்றார்.