மாதத்திற்கு 2,000 அமெரிக்க டொலர் குறைந்தபட்ச சம்பளத்தை இலக்காகக் கொண்டு எங்கள் தொழிலாளர்களின் வருவாய்த் திறனை உயர்த்துவதே எங்கள் நோக்கம் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை அவர் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உண்மையில் புதிய சந்தைகளில் குறிப்பாக ஐரோப்பா (Europe) முழுவதும் எங்கள் தொழிலாளர் சக்தியை விரிவுபடுத்த நாங்கள் தீவிரமாக முயன்று வருகிறோம்.
வரலாற்று ரீதியாக இஸ்ரேலிய (Israel) சந்தை ஒப்பீட்டளவில் சுமாரானதாக இருந்தாலும் பிராந்தியத்தின் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியிலும் எங்கள் முயற்சிகள் பல்வேறு துறைகளில் வாய்ப்புகளை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளன.
குறைந்த ஊதியத்திற்குத் தீர்வு காண்பதை விட குறைந்தபட்சம் மாதத்திற்கு 2,000 அமெரிக்க டொலர் (US dollar) குறைந்தபட்ச சம்பளத்தை இலக்காகக் கொண்டு எங்கள் தொழிலாளர்களின் வருவாய்த் திறனை உயர்த்துவதே எங்கள் நோக்கம்.
இந்த ஆண்டு ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலிருந்தும் ஏராளமானோரை வெளிநாட்டு வேலைகளுக்காக அனுப்புவதற்கு நான் திட்டமிட்டுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.