போட்டியின்றி ஐசிசியின் தலைவராக தெரிவானார் ஜெய் ஷா



சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக இந்தியாவை சேர்ந்த ஜெய்ஷா போட்டியின்றி தெரிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக உள்ள நியூசிலாந்ததைச் சேரந்த கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் முடிவடைகிறது. 


அவர் 3வது முறையாக தலைவர் பதவிக்காக போட்டியிடமாட்டேன் என அறிவித்துள்ளார்.

இதனால் ஐ.சி.சி.,தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேலும் அதற்காக விருப்பமுள்ளவர்கள் ஓகஸ்ட் 27ம் திகதிக்குள் வேட்புமனுக்களை அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போதைய தலைவர் கிரெக் பார்க்லே மூன்றாவது முறையாக பதவியேற்க போவதில்லை என முடிவு செய்த பிறகு ஜெய் ஷா மட்டுமே தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர் போட்டியின்றி தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். 

கடந்த 2019 ஒக்டோபர் மாதம் முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளராகவும், 2021 ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராகவும் பணியாற்றிய ஜெய் ஷா எதிரவரும் டிசம்பர் முதலாம் திகதி  சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் பதவியை ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.