தற்போதைய நிலையில் யாழ். மாவட்டத்தில் போதிய உணவு இல்லாதிருப்போர் பட்டியலில் 6500 இற்கு உட்பட்ட குடும்பங்கள் உள்ளன.
குறித்த குடும்பங்கள் மாத்திரமே உணவு பஞ்ச நிலைமையை எதிர்நோக்கும் நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்டத்தில் உணவு அற்ற நிலைமை தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அந்தக் குடும்பங்களுக்கு அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் விசேட வேலைத் திட்டத்தின் மூலம் அவர்களுக்குரிய உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            