காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவையில் சிக்கல்...! பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு

புதிய இணைப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை (Kangesanthurai) வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மீண்டும் ஒத்திவைத்து மே 19ம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சில சட்டரீதியான அனுமதிகள் உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டதுடன், மே 17 வரையில் அந்த செயற்பாடு பிற்போடப்பட்டநிலையில் மீண்டும் தற்போது பிற்போடப்பட்டுள்ளது.

பயணத்தை மேற்கொள்வதற்காக பதிவுகளை மேற்கொண்ட பயணிகள் மே19 அல்லது அதற்குப் பின்னர் தாம் விரும்பிய திகதிகளில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் (Jaffna) - காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் வரையான கப்பல் சேவையை நாளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக குறித்த கப்பல் சேவையை கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

சில சட்டரீதியான அனுமதிகள் உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டதுடன் நாளைய தினம் வரையில் அந்த செயற்பாடு பிற்போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே பயணத்தை மேற்கொள்வதற்காக பதிவுகளை மேற்கொண்ட பயணிகள் நாளை அல்லது அதற்குப் பின்னர் தாம் விரும்பிய திகதிகளில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பதிவினை மேற்கொண்ட பயணிகள் செலுத்திய கட்டணத்தினை முழுமையாக மீளப்பெற விரும்பினால் customer.care@sailindsri.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு கட்டணத்தினை மீளப்பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.