யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்து சேவை....! வெளியான முக்கிய அறிவிப்பு


கொழும்பு (colombo) கோட்டை மற்றும் யாழ் (jaffna) காங்கேசன்துறை வரை விசேட தொடருந்து சேவை இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் தொடருந்து இன்று முதல் எதிர்வரும் 21ம் திகதி வரை சேவையில் ஈடுபடவுள்ளது.

தொடருந்து திணைக்களம் இன்று (19.9.2024) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து பயணத்தை ஆரம்பித்து காலை 10.37க்கு குருநாகலைச் சென்றடையும். பின்னர் குறித்த தொடருந்து பிற்பகல் 1.30க்கு அனுராதபுரத்தை சென்றடையும். மாலை 4.36க்கு காங்கேசன்துறையை அடையுமென தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி எதிர்வரும் 20ம் மற்றும் 22ம் திகதிகளில் பயணத்தை முன்னெடுக்கும்.

குறித்த தொடருந்து நண்பகல் 12 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து பயணத்தை ஆரம்பித்து பிற்பகல் 3.17க்கு அனுராதபுரத்திலிருந்து புறப்படும்.

மாலை 5.57க்கு குருநாகலிலிருந்து புறப்பட்டு 7.35க்கு பொல்கஹாவெல, குருநாகல், மஹவ உள்ளிட்ட தொடருந்து நிலையங்களில் தரித்து நிற்கும் எனவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.