யாழ்ப்பாணம் கொடிகாமம் மிருசுவில் பகுதியில் பேருந்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் இன்று (27) மதியம் பயணித்த ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
தொலைபேசியில் யாரோ ஒருவருடன் குறித்த நபர் சத்தமாக பேசிக்கொண்டிருந்தார் எனவும் இதன்போது விழுந்திருக்கலாம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் கொடிகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் (jaffna) - மட்டுவில் பகுதியில் நேற்று(26) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            