யாழ் - காட்லிக் மாணவனின் அரிய கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி காட்லிக் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் செல்வச்சந்திரன் சிறிமன் கலப்பு வகையில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை இன்று அறிமுகம் செய்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் மோட்டார் பொருத்தியும், மீள் சுழற்சி பொருட்களை பயன்படுத்தியும் அதனை கண்டு பிடித்துள்ளார்.

இன்றைய தினம் குறித்த கலப்பு துவிச்சக்கர வண்டி அறிமுக விழா இளம் புத்தாக்குநர் கழக தலைவர் இராஜ அரவிந்தன் தலைமையில் காட்லிக் கல்லூரி ஆய்வுகூட மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் பாடசாலை அதிபர் தம்பையா கலைச்செல்வன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்டுபிடிப்பை அறிமுகம் செய்து வைத்தார்.

தற்போது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறான கண்டுபிடிப்பு மிக முக்கியத்துவம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் பாடசாலை உப அதிபர் ஆசிரியர்கள், நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.