இன்றைய காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் பெரும்பாலானவர்களுக்கு கடும் சவாலாகவே உள்ளது.
உடல் பருமனை குறைக்க நாள் ஒன்றுக்கு 10,000 அடிகள் நடந்தால் உடல் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளலாம் முன்னைய ஆய்வுகளில் கூறப்பட்டது.
ஆனால் அண்மையில் வெளியாகியுள்ள புதிய ஆய்வு அறிக்கையில் 5,000-க்கும் குறைவான அடிகள் நடந்தால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள 2 இலட்சத்துக்கு 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், எந்தவொரு காரணத்திற்காகவும் முன்கூட்டியே இறப்பதற்கான அபாயத்தைக் குறைக்க 4,000 அடி வரை நடந்தால் போதுமானது என கூறப்படுகிறது.
இதயம் மற்றும் இரத்த நாளங்களுக்கு நன்மை செய்ய 2,300-க்கு மேல் நடந்தால் போதுமானது. 4,000-க்கு மேல் நடக்கும் ஒவ்வொரு கூடுதல் 1,000 அடிகளும் 15வீதம் வரை இறக்கும் அபாயத்தை குறைக்கின்றன.
நீங்கள் எவ்வளவு வேகமாக நடக்கின்றீர்களோ, அந்தளவுக்கு உடல் ஆரோக்கியமாக காணப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் பிரகாரம், போதிய உடல் செயற்பாடு இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் 3.2 மில்லியன் இறப்புகள் பதிவாகின்றன. இது உலகளவில் ஏற்படும் உயிரிழப்புக்கான காரணிகளில் நான்காவதாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.