வடக்கு கிழக்கு தமிழரின் மனங்களை சீனா வெல்வது கடினம்



வடகிழக்கு தமிழர்களை சீனா வெல்வது கடினம் என தென்னிலங்கை சிங்கள பத்தி எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

கோட்டாபய அதிபராக பதவியேற்ற பிறகு சீனா வடக்கு நோக்கி நகர ஆரம்பித்தது. சீனத் தூதுவர் தற்போது வடக்கிற்கு சென்று வருகிறார்.

அவர் தென்பகுதிக்கு செல்லும் போது சிங்கள தேசிய உடையை அணிந்ததில்லை. எனினும் அவர் தமிழ் தேசிய உடைகளை அணிந்துகொண்டு வடக்கில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வடக்கு மக்களுக்கு உதவுகின்றார்.

வடக்கில் சீனாவின் வருகை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பிளவுபட்டுள்ளது.

வடகிழக்கு தமிழர்கள் மத ரீதியாகவும், மொழி ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் இந்தியர்களுடன் நெருக்கமாக உள்ளனர். போரின் போது சீனா எப்படி நடந்துகொண்டது என்பதை அவர்கள் மறக்க மாட்டார்கள்.

எவ்வாறாயினும், வடகிழக்கு தமிழர்கள், இந்தியாவிடம் தமது பெறுமதியை வெளிப்படுத்தும் வகையில் சீனாவுடனான உறவை கைவிடமாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.