பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இலங்கை அதிகாரிகள், நம்பத்தகுந்த ஆதாரங்கள் இன்றி சிறுபான்மை சமூகங்களை குறிவைத்து பயன்படுத்தி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறையை நிறுத்துவதாக பலமுறை உறுதிமொழி அளித்த போதிலும், அது நிறுத்தப்படவில்லை என்றும் அது இலங்கை அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதைகளை அனுபவித்தாலும், அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றும் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
PTA என பரவலாக அறியப்படும் சட்டம், நீட்டிக்கப்பட்ட நிர்வாக தடுப்புக்காவல், வரையறுக்கப்பட்ட நீதித்துறை மேற்பார்வை மற்றும் சித்திரவதைக்கு எதிரான போதிய பாதுகாப்புகளை அனுமதிக்கும் விதிகளைக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் 2022 ஆம் ஆண்டு அப்போதைய வெளிவிவகார அமைச்சர் அதன் பயன்பாட்டிற்கு இடைக்காலத் தடை விதிப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல்கள் தொடர்ந்தன என்று மனித உரிமைகள் குழு குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும் 2015 ஆம் ஆண்டு முதல் PTA ஐ ரத்து செய்வதாக அரசாங்கம் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பயங்கரவாத எதிர்ப்பு மசோதா (ATB) வரைவு சட்டம் மார்ச் 2023 இல் வெளியிடப்பட்டது. இதில் சில புதிய மாற்றங்கள் இருந்தாலும் துஷ்பிரயோகங்கள் தொடர்கின்றன,
1979 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் பின் தமிழ் சிறுபான்மையினரை குறிவைக்க PTA முதன்மையாக பயன்படுத்தப்பட்டது.
இருந்தபோதும் நீண்ட கால PTA ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகளின் சர்வதேச அழுத்தம் காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.