இஸ்ரேல் பாலஸ்தீன போருக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டம் இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிராகவும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்துமே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (13) தெவட்டகஹபள்ளிவாசலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.