இலங்கையின் முக்கிய வைரஸாக ஒமிக்ரோன் மாறுகிறதா?

டெல்டாவை முந்திக்கொண்டு ஒமிக்ரோன் திரிபு வேகமாக பரவும் நிலை காணப்படுவதால் இலங்கையின் முக்கிய வைரஸாக ஒமிக்ரோன் வைரஸை தற்போது குறிப்பிடமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஒவ்வாமை, மூலக்கூற்று நுண்ணுயிர் பிரிவின் தலைவரான கலாநிதி சந்திம ஜீவந்தர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.நாட்டில் இதுவரை 208 ஒமிக்ரோன் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.புதிதாக இனங்காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுநோயாளர்களில் பெரும்பாலானோர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக வந்திருந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.குறித்த அனைவரும், கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை வதிவிடமாகக் கொண்டவர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.