வெறும் வயிற்றில் பால் குடித்தால் இவ்வளவு பாதிப்பா? பால் குடிக்க சரியான நேரம் இது தான்...

பாலில் கால்சியம் நிறைந்துள்ளதாலும் பால் ஒரு நிறையுணவு என்பதாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பால் குடிப்பது தொன்றுதொட்டு வழக்கமாக காணப்படுகின்றது.

பால் பெரும்பாலும் ஊட்டச்சத்தின் சக்தியாக குறிப்பிடப்படுகிறது. கால்சியம், புரதம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் வளமான ஆதாரமாக, இது மனித உடலின் முழுமையான வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாள் முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் பால் சாப்பிடுகிறோம். ஆனால், வெறும் வயிற்றில் பால் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்பது குறித்து முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

விஞ்ஞான ரீதியில் பார்த்தோமானால் நம்முடைய சிறுகுடலில் லாக்டேஸ் என்சைம் காணப்படுகிறது.இரவோ, பகலோ நாம் பால் குடிக்கும் போது இந்த லாக்டேஸ் என்சைம் பாலில் உள்ள கேலக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் என்பவற்றை சிறிய மூலக்கூறுகளாகப் பிரித்தெடுக்கும்.

வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா?

தினமும் காலையில் பால் குடிப்பதால் செரிமான சக்தி அதிகரிப்பதுடன் எலும்புகளின் ஆராக்கியத்துக்கும் வளர்ச்சிக்கும் பெரும் பங்கு வகிக்கின்றது.

பாலில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளதால் இது ஒரு நிறை உணவாக பார்க்கப்படுகின்றது.

ஆனால் லாக்டோஸ் பிரச்சனை  இருப்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பதால், இது வயிற்று வலி வயிற்றுப்போக்கு வாயு பிரச்சனை போன்ற வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளை கொடுக்கும். 

மேலும் வெறும் வயிற்றில் பால்குடித்தால் வயிற்றில் எரிச்சல் மற்றும் அமிலத்தன்மை போன்ற சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

அப்படியும் வெறும் வயிற்றில் பால் குடிக்க வேண்டும் என்று தோன்றினால், சூடான பாலுக்கு பதிலாக குளிர்ந்த பாலை பருகலாம். அது அமிலத்தன்மையை ஓரளவுக்கு கடடுப்படுத்த உதவும்.

காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பது ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆனால் காலை உணவு சாப்பிட்ட பின்னர்  பால் குடிப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

உணவு சாப்பிட்ட பிறகு பால் குடிக்கலாம். குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பால் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணைப்புரியும். 

உடல் எடையை குறைக்கும் முயற்ச்சியில் இருந்தாலோ, இதயம் சம்பந்தமான நோய்கள் இருந்தாலோ வெறும் வயிற்றில் பால் குடிப்பதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். 

இரவு தூங்கும் முன் பால் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். இரவு பால் குடிப்பது நல்ல உறக்கத்திற்கு உதவுவதுடன், சூடான பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் சளி, இருமல் போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். 

ஆய்வுகளின் பிரகாரம் காலையிலும் இரவிலும் பால் குடிப்பது சிறந்தது ஆனால் வெறும் வயிற்றில் குடிப்பது பாதிப்புகளை ஏற்படுத்தும்.