அநுரவிடம் இருந்து சுமந்திரனுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு....! வெளியான தகவல்

இலங்கையின் புதிய ஜனாபதியாக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பதவியேற்றதை தொடர்ந்து பிரதமராக ஹரிணி அமரசூரியவும் (Harini Amarasuriya) ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அமைச்சரவையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்திற்கும் (Vijitha Herath) மட்டுமே அமைச்சுப்பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய அமைச்சுக்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவே பொறுப்பேற்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை  தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனுக்கு (M. A. Sumanthiran) அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் அவருக்கு அமைச்சுப்பதவி வழங்கப்படும் என ஜனாதிபதி செயலகத்தில் இருந்து எந்தவொரு உத்தியோகபூர்வ தகவல்களும் கிடைக்கவில்லை என அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.