எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்களுடனான முதலாவது குழு இலங்கை வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வாரங்களில், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களுடனான மற்றொரு குழுவும் இலங்கை வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர் குழுவொன்றும் ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்கும் பணிகளில் பங்கேற்பதற்காக இலங்கை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக இந்த குழுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸார், முப்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இந்த பாதுகாப்பு கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் காணப்படும் ஆபத்துக்கள் குறித்து கண்டறிந்து அதற்கு ஏற்ற வகையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எந்தவொரு வேட்பாளருக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே குறிப்பிட்ட பகுதிகளில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அனைத்து ஆயுதப் படை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆகஸ்ட் 27 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிர்வாக மாவட்டங்களில் பொதுப் பாதுகாப்பைப் பேணுவதற்கும், அத்தகைய மாவட்டங்களுக்கு அருகிலுள்ள பிராந்திய நீரைப் பராமரிப்பதற்கும் பொலிஸ் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளை அனுப்புவதற்கு குறித்த வர்த்தமானி வழிவகுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் வாரங்களில், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களுடனான மற்றொரு குழுவும் இலங்கை வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர் குழுவொன்றும் ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்கும் பணிகளில் பங்கேற்பதற்காக இலங்கை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக இந்த குழுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸார், முப்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இந்த பாதுகாப்பு கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், ஒவ்
மேலும் எந்தவொரு வேட்பாளருக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், தேர்
இதனிடையே குறிப்பிட்ட பகுதிகளில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அனைத்து ஆயுதப் படை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆகஸ்ட் 27 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிர்வாக மாவட்டங்களில் பொதுப் பாதுகாப்பைப் பேணுவதற்கும், அத்தகைய மாவட்டங்களுக்கு அருகிலுள்ள பிராந்திய நீரைப் பராமரிப்பதற்கும் பொலிஸ் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளை அனுப்புவதற்கு குறித்த வர்த்தமானி வழிவகுக்கின்றமை குறிப்பிடத்தக்