வடக்கு கிழக்கில் இன்று வெடித்த எழுச்சி போராட்டங்கள்..!

 
 
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் எட்டு மாவட்டங்களிலும் காலை 10 மணிக்கு இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதேநேரம்  யாழ்ப்பாணம் செம்மணி புதை குழிக்கு அண்மித்த பகுதியான, நல்லூர் வீதி வளைவு அமைந்துள்ள பகுதியிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.