திருகோணமலை துறைமுகத்தை வந்ததடைந்தது இந்தியாவின் நிரீக்‌ஷக் கப்பல்


இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘நிரீக்‌ஷக்’ கப்பலானது நேற்று (14) உத்தியோகபூரவமாக திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த கப்பலிற்கு உரிய மரியாதை அளித்து சிறிலங்கா கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றுள்ளனர்.

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘நிரீக்‌ஷக்’ கப்பலானது சுமார் 70.5 மீ நீளமுடயத்துடன் டைவிங் வசதிகளையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டளைத் தலைமையகத்தில்

இந்த கப்பலானது 137 பேரைக் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது, ஜீது சிங் சோஹான் இந்த கப்பலின் கட்டளைத் தளபதியாக விளங்குகின்றார்.

குறித்த கப்பலின் கட்டளை அதிகாரி கிழக்கு கடற்படைக் கட்டளைத் தளபதியான அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை கிழக்கு மாகாண கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வைத்து இன்று காலை சந்தித்தார்.

இரண்டு கடற்படைகளுக்கும் இடையில் ஒத்துழைப்பையும்,நல்லெண்ணத்தையும் மேம்படுத்துவதற்காக பல நிகழ்ச்சிகளை முன்னெடுக்கவுள்ளதாக பேசிக்கொண்டார்கள்.

தவிரவும், திருகோணமலையில் உள்ள மக்களுக்காக சுகாதார முகாம்கள், சிறிலங்கா கடற்படையின் டைவிங் பிரிவுடன் இணைந்து டைவிங் பயிற்சிகள் என்பவற்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் கப்பல் நாட்டில் தங்கியிக்கும் காலத்திற்குள் நாட்டிலுள்ள சில சுற்றுலா தலங்களை பார்வையிடவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.