மித்தெனிய கடேவத்த சந்தி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இறந்தவர் "கஜ்ஜா" என்ற அருண விதானகமகே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறந்தவரின் மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும், உயிரிழந்தவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மித்தெனிய கடேவத்த சந்தி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆறு வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்தனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மற்றொரு 9 வயது சிறுவன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் மகளும் மகனும் அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 39 வயதான கஜ்ஜா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மகளும், மகனும் படுகாயமடைந்த நிலையில், தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது 06 வயதான சிறுமி உயிரிழந்தார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த 9 வயது சிறுவன் தற்போது எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
T56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்ய மித்தெனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.