இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய குழாம் அறிவிப்பு!


இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதன்படி இரு அணிகளும் மோதும் இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய குழாம்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான  இருபதுக்கு 20 குழாமில் சுப்மன் கில், யசஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அஹமட் மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன் ரோஹித் சர்மா தலைமையிலான ஒருநாள் போட்டிகளுக்கான குழாமில் சுப்மன் கில் , விராட் கோலி, கே. எல். ராகுல், ரிஷப் பண்ட் , ஷ்ரேயஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், மொஹமட் சிராஜ் , வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அஹமட் , ஹர்ஷித் ராணா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.