இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அடுத்த வாரம் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அதன்படி, இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(04) இந்த ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை ஜனாதிபதி புதுடெல்லிக்கு விஜயம் செய்யவுள்ள சந்தர்ப்பத்தில் இந்த உத்தியோகபூர்வ விஜயம் இடம்பெறுகிறது.
இலங்கையின் கடந்த ஜனாதிபதிகள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் இந்தியாவுக்கு முதலில் பயணம் செய்யும் முறை பாரம்பரியமாக இருந்து வருகின்றது.
அத்துடன், இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான ஒரு நாள் பயணத்தின் போது பல இந்திய திட்டங்கள் குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.